சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவு மக்களுக்கான கடற்றொழில் சங்க கட்டடம் திறப்பு
இலங்கை
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவு மக்களுக்கான கடற்றொழில் சங்க கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினரின் 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் குறித்த கட்டடம் மீள்புனரமைப்பு செய்யப்பட்டு இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது கடற்றொழில் சங்கம் மற்றும் சமாசங்களைச் சேர்ந்தவர்களுக்கான ஏனைய தேவைகள் கூறித்தும் ஆராயப்பட்டன.
டித்வா புயலின் தாக்கத்தினால் கடற்றொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் தமக்கான வாழ்வாதாரத்தினை பெற்றுத்தருமாறும் கடற்றொழில் சங்கத்தினர் நாடாளுமன்ற உறுப்பினரிடமும், பிரதேச செயலரிடமும் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.























