• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் வானிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடா

கனடா முழுவதும் குளிர்கால வானிலையின் கலவையான தாக்கம் எதிர்பார்க்கப்படுவதால், 10 மாகாணங்களில் 6 மாகாணங்களிலும், 3 பிரதேசங்களில் 2 பிரதேசங்களிலும் வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

நியுபவுன்ட்லாந்த் என்ட் லாப்ராடர், நோவா ஸ்கோஷியா, பிரின்ஸ் எட்வர்ட் தீவு மற்றும் கியுபெக் ஆகிய இடங்களில் கடுயைமான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அல்பேர்ட்டா, பிரிட்டிஷ் கொலம்பியா, யுகோன் மற்றும் வடமேற்கு பிராந்தியம் ஆகிய இடங்களிலும் வானிலை எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ளன.

நியூஃபவுண்ட்லாந்து மற்றும் லாப்ரடோர் கடற்கரை பகுதிகளில் “பனிப்புயல் போன்ற சூழ்நிலைகள்” ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மிக மோசமாக பாதிக்கப்படும் பகுதிகளில் 40 சென்றி மீற்றருக்கும் அதிகமான பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நியூஃபவுண்ட்லாந்தின் வடக்கு பகுதிகள் ஆரஞ்சு நிற குளிர்கால புயல் மற்றும் காற்று எச்சரிக்கைகளின் கீழ் உள்ளன.

கிழக்கு மற்றும் வடகிழக்கு கடற்கரைகளில் கடல் அலைகள் மற்றும் புயலினால் கரையோர வெள்ளம் ஏற்படலாம் என்றும் முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நோவா ஸ்கோஷியாவின் வடகிழக்கு பகுதிகளில் குளிர்கால புயல் எச்சரிக்கைகள் அமலில் உள்ளன. இடத்தைப் பொறுத்து 5 முதல் 40 சென்றி மீற்றர் வரை பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Leave a Reply