• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இங்கிலாந்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்க புதிய திட்டம்

இங்கிலாந்தில் மகளிர் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை ஒரு தேசிய அவசரநிலை என அறிவித்த உள்நாட்டுச் செயலாளர் ஷபானா மஹ்மூத், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ளார்.

இந்த தேசிய உத்திக்கு எதிராக கன்சர்வேடிவ்கள் விமர்சனம் செய்தது. எனினும் , பாலியல் குற்றங்கள் மற்றும் பாலியல் வல்லுறவுகளுக்காக 2029 ஆம் ஆண்டிற்குள் அனைத்து படைகளிலும் பிரத்யேக விசாரணைப் பிரிவுகள் உருவாக்கப்பட உள்ளன.

கண்காணிப்புக் கருவி (electronic tags) மற்றும் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கும் உள்நாட்டு துஷ்பிரயோக பாதுகாப்பு உத்தரவுகள் (DAPOs) விரிவுபடுத்தப்படும்.

இணையவெளியில் செயல்படும் குற்றவாளிகளை இலக்காகக் கொண்டு, இரகசிய மற்றும் உளவு நுட்பங்களைப் பயன்படுத்தும் அதிகாரிகளின் வலையமைப்பிற்கு கிட்டத்தட்ட £2 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வன்முறையாளர்கள் மறைந்து கொள்ள இடமிருக்காது என்று அரசாங்கம் கூறுகிறது.
 

Leave a Reply