காதலன் வெளியிட்ட அந்தரங்க காணொளி - பிரான்ஸ் வாழ் தமிழ் யுவதியின் கதறல்
பிரான்ஸில் வாழும் தமிழ் யுவதி ஒருவர் வெளியிட்டுள்ள காணொளி சமூக வலைத்தளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது முன்னாள் காதலனுடன், அந்தரங்கமாக இருந்த காணொளியை காதலை முறித்த பின் முன்னாள் காதலனால் வெளியிடப்பட்டுள்ளதாக அந்த யுவதி கவலை தெரிவித்து காணொளி வெளியிட்டுள்ளார்.
எனினும் முன்னாள் காதலன் காணொளியை தான் வெளியிட வில்லை என கூறியதாகவும் யுவதி தெரிவித்துள்ளடன் அதில் உண்மையில்லை எனவும் கூறியுள்ளார்.
தாம் காதலித்த சமயம் எடுத்த புகைப்படங்கள், காணொளிகள் முன்னாள் காதலனிடம் மட்டுமே இருந்ததாகவும், அவரே அதனை இளையத்தில் பரப்பியதாகவும் யுவதி குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனால் தானும் தனது குடும்பத்தையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தான் மன் உழைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் இலங்கை மட்டுமல்லாது வேறு நாடுகளிலும் உள்ள உறவினர்கள் மத்தியில் தனக்கும் ,தனது குடும்பத்தினரும் பெரும் தலை குனிவை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த யுவதி வேதனை வெளியிடுள்ளார்.
தற்போது இணையவாசிகள் மத்தியில் இக்காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பலரும் யுவதிக்கு ஆதர்வாக கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை வளர்ந்துவரும் இளைஞர் , யுவதிகள், இதுமாதிரியான சம்பவங்களில் சிக்கி தங்கள் வாழ்கையை அழிக்க வேண்டாம் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





















