• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேர்தலில் தோல்வி - சொன்னபடி மீசையை எடுத்த நபர்

இந்தியாவின் கேரளாவில் தேரதலில் தோல்வி அடைந்ததால் நபர் ஒருவர் மீசையை எடுத்த சம்பவம் வைரலாகியுள்ளது.

கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவுகள் சனிக்கிழமை (13) அறிவிக்கப்பட்டன.

இதில், மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் 4ல் காங்கிரஸ் கூட்டணி வென்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி முதல் முறையாக, திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. ஆளுங்கட்சியான இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்நிலையில், “பத்தனம்திட்டா நகராட்சியில் LDF வெற்றி பெறவில்லை என்றால், எனது மீசையை எடுத்து விடுவேன்” என்று, LDF தொண்டரான பாபு வர்கீஸ் என்பவர் தேர்தலின்போது தனது நண்பர்களிடம் சவால் விடுத்திருந்தார்.

ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், LDF தோல்வி அடைந்தது. இதனால் பாபு வர்கீஸ், தான் சொன்னது போலவே தனது மீசையை மழித்துக் கொண்டுள்ளார். இது குறித்த வீடியோ வலைதளங்களில் வைரலாகிறது.
 

Leave a Reply