அவுஸ்திரேலியாவை நடுங்க வைத்த துப்பாக்கிச் சூடு - அதிர்ச்சி தெரிவித்த மன்னர் சார்லஸ்
சிட்னியின் போண்டி கடற்கரையில் நடந்த சானுகா கொண்டாட்டத்தில் யூத மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டால் தானும் ராணி கமிலாவும் திகைத்துப் போனதாகவும் வருத்தமடைந்ததாகவும் பிரித்தானியாவின் மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் 11 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், டசின் கணக்கானோர் காயங்கலுடன் தப்பியுள்ளனர். அவுஸ்திரேலியாவின் அரச தலைவராக சார்லஸ் செயல்பட்டு வந்தாலும் அந்தப் பதவி பெரும்பாலும் வெறும் சம்பிரதாயமானது.
இந்த நிலையில், சமூக ஊடகத்தில் மன்னர் சார்லஸ் பதிவிட்டுள்ள அறிக்கையில், போண்டி கடற்கரையில் சானுகா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட யூத மக்கள் மீது நடத்தப்பட்ட மிகக் கொடூரமான யூத எதிர்ப்பு பயங்கரவாதத் தாக்குதலால் நானும் என் மனைவியும் திகைத்துப் போய் வருத்தமடைந்துள்ளோம்.
தங்கள் சமூக உறுப்பினர்களைப் பாதுகாக்கும் போது காயமடைந்த காவல்துறை அதிகாரிகள் உட்பட, மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான இரங்கலை தெரிவிக்கிறோம்.
இன்னும் மிக மோசமான மற்றும் துயர சம்பவங்களைத் தடுத்து வீரதீரச் செயல்களில் ஈடுபட்ட காவல்துறை, அவசர சேவைகள் மற்றும் பொதுமக்களை நாங்கள் பாராட்டுகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்தனர் மற்றும் முதல் பதிலடி கொடுத்தவர்களின் துணிச்சலைப் பாராட்டியுள்ளனர்.
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்த தாக்குதலை மிக மோசமான சம்பவம் என குறிப்பிட்டுள்ளார்.






















