ஆஸ்திரேலிய தாக்குதலுக்கு உலக தலைவர்கள் கண்டனம்
ஆஸ்திரேலியாவின் சிட்னி போண்டாய் (Bondi) கடற்கரையில் நடத்தப்பட்ட தாக்குதலைக் உலகத் தலைவர்கள் கடுமையாகச் சாடியிருக்கின்றனர்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) அது மிகவும் மோசமான செயல் என்று கூறினார்.
வெள்ளை மாளிகையில் நேற்று ரோட் ஐலண்ட் (Rhode Island) மாநிலத்திலிருக்கும் பிரவுன் (Brown) பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டோருக்கு இரங்கல் தெரிவித்தபோது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
இஸ்ரேலிய அதிபர் ஐசாக் ஹெர்ஸொக் (Isaac Herzog) யூதர்களுக்கு எதிரான கொடுமையான தாக்குதல் அது என்றார்.
பிரெஞ்சு அதிபர் இமானுவல் மக்ரோன் (Emmanuel Macron) அதுபோன்ற தாக்குதல்களைத் தடுக்கப் பிரான்ஸ் (France) கடுமையாகப் போராடும் என்று வலியுறுத்தினார்.
ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்ட்டனி ஆல்பனீசி (Anthony Albanese), நேற்றைய துப்பாக்கிச்சூடு யூதர்களுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல் என்று கூறியுள்ளார்.
நாட்டை மிகுந்த துயரத்தில் ஆழ்த்திய அந்தத் தாக்குதலுக்கான காரணத்தை அறிய தீவிர விசாரணை நடப்பதாக அவர் சொன்னார்.






















