• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உலகை உலுக்கிய ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூடு - தந்தை - மகன் தொடர்பில் வெளியான தகவல்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் சிட்னி நகரில் போண்டி கடற்கரை அருகே ஹனுக்கா பண்டிகையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் உலகை உலுக்கியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 16 பேர் கொலப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமானதாகும்.

விடுமுறை நாட்களில் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும். ஞாயிற்றுக்கிழமையான நேற்று மக்கள் கடற்கரையில் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர். ஆஸ்திரேலியாவை உலுக்கிய இச்சம்பவத்திற்கு அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அதிர்ச்சி தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் தந்தை - மகன் என தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 50 வயது சஜித் அக்ரம் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மகனான 24 வயது மகன் நவீத் அக்ரம் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் தாக்குதலை நடத்திய இருவரும் பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேக வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

Leave a Reply