அழுவுற சீனா, நான் மாட்டேன் பா... கடைசி வரை மறுத்த ரஜினி
சினிமா
அழுவுற சீனா, நான் மாட்டேன் பா... கடைசி வரை மறுத்த ரஜினி; ஆனா அந்த சீன் தான் டாப் டக்கர்: படையப்பா மெமரீஸ்!
'படையப்பா’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க மறுத்த காட்சி குறித்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மனம் திறந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பட்ஜெட் இயக்குனர், தயாரிப்பாளர்களுக்கு பிடித்த இயக்குனர் என்று அழைக்கப்படும் கே.எஸ்.ரவிக்குமார், ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இருவருக்கும் நெருக்கமானவர். இருவரையும் வைத்து படங்கள் இயக்கியுள்ள கே.எஸ்.ரவிக்குமார், சிவாஜி கணேசன் நடிப்பில் இயக்கிய படம் தான் ’படையப்பா’. ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில், லட்சுமி, மணிவண்ணன், நாசர், ராதாரவி, ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த படம் இப்போதும் பேசப்படக்கூடிய ஒரு படமாக இருக்கும் நிலையில், படத்தில் ரஜினிக்கு சமமாக பேசக்கூடிய கேரக்டர் என்றால் அது ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி கேரக்டர் தான். இந்த கேரக்டரில் நடிக்க பல நடிகைகள் தேர்வு செய்தும் கடைசியாக இவர் தான் கமிட் ஆகி நடித்துள்ளார். ஆனால் வாய்ப்பு கிடைத்திருந்தால் நான் ரஜினிக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்த கேரக்டரில் தான் நடித்திருப்பேன் என்று ரம்யா கிருஷ்ணனே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
‘படையப்பா’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ’படையப்பா’ திரைப்படம் இன்று ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘படையப்பா’ திரைப்படத்தில் நடிகர் ரஜினி நடிக்க மறுத்த காட்சி குறித்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மனம் திறந்துள்ளார். சித்ரா லட்சுமணன் உடனான நேர்காணலில் அவர் பேசியதாவது, “படையப்பா படத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு ரஜினி, சித்தாராவிற்கு உணவு ஊட்டிவிடும் காட்சி ஒன்று இருக்கும். அதில் ரஜினி நடிக்கவே மாட்டேன் என்றார்.
அப்போது நான், நீங்க அளவே வேண்டாம். கண்ணில் இருந்து லைட்டாக தண்ணீர் வந்தால் மட்டும் போதும். மாஸ் ஹீரோவாக நீங்க நடித்துக் கொண்டிருக்கும் பொழுது உங்கள் கண்ணில் இருந்து கொஞ்சம் தண்ணீர் வந்தாலே மியூசிக் பில்டப்புக்கு ஆடியன்ஸ் கண்களில் இருந்து அதிக கண்ணீர் வரும். இந்த காட்சி ரொம்ப டச்சிங்காக இருக்கும் என்று கெஞ்சி சித்தாராவிற்கு சாப்பாடு ஊட்டும் காட்சியில் நடிக்க வைத்தேன். அந்த காட்சியின் போது ரஜினிக்கு உண்மையாக கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. அந்த காட்சி ஒரே ஷாட்டில் எடுத்தது. உண்மையாகவே அந்த காட்சிக்கு கைத்தட்டல் வந்தது” என்றார்.
தேன்மொழி





















