பாக்யராஜ் படத்தில் மெகா ஹிட் பாட்டு, கடைசி வரியை மறந்த இளையராஜா
சினிமா
பாக்யராஜ் படத்தில் மெகா ஹிட் பாட்டு, கடைசி வரியை மறந்த இளையராஜா; மாலை போட்டு ஆபாச பாடலை பாடி மாட்டிக்கொண்ட தருணம்!
பாக்யராஜ் படத்தின் மெகா ஹிட் பாடல் ரெக்கார்டிங்கின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து பாக்யராஜ் மனம் திறந்துள்ளார்.
தமிழ் திரையுலகின் திரைக்கதை மன்னன் என்ற புகழுக்கு சொந்தக்காரர் பாக்யராஜ். இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர், வசனகர்த்தா, பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவர் பாக்யராஜ், பாரதிராஜாவிடம் உதவியாளராக பணிப்புரிந்தவர். தொடர்ந்து 7 வெள்ளிவிழா படங்களை கொடுத்த ஒரே இயக்குனர் என்ற பெருமையும் இவருக்கே சேரும். தான் இயக்கும் படங்களில் தானே ஹீரோவாக நடிக்கும் பாக்யராஜ் இந்தியிலும் அமிதப்பச்சனை வைத்து படங்களை இயக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கதை சொல்லும் பாணியிலும், இயல்பான நடிப்பிலும் தனி முத்திரை பதித்தவர் பாக்கியராஜ். இவரது திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்திருப்பதற்கு இவரது தனித்துவமான திரைக்கதை உத்தியே காரணம். ஒரு கை ஒரு ஓசை, மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, அந்த 7 நாட்கள், விடியும் வரை காத்திரு, தூறல் நின்னு போச்சு, சின்ன வீடு, சின்ன ராசா போன்ற பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
அந்த காலத்தில் இயக்குனராக பீக்கில் இருந்த பாக்யராஜ், ஏ.வி.எம் நிறுவனத்திற்காக இயக்கிய படம் "முத்தானை முடிச்சு" பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இந்த படத்தின் மூலம் தான் நடிகை ஊர்வசி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் இளையராஜா இசையில் உருவான இப்படத்தின் அத்தனை பாடலும் மக்கள் மத்தியில் செம ஹிட்டானது. அந்த வகையில், 'முந்தானை முடிச்சு' படத்தின் டைட்டில் பாடலை இளையராஜாவும், ஜானகி அம்மாவும் பாடியிருப்பார்கள்.
இந்த பாடல் ரெக்கார்டிங்கின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் பற்றி இயக்குனர் பாக்யராஜ் பகிர்ந்துள்ளார். இது தொடர்பான பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியதாவது, “விளக்கு வச்ச நேரத்துல மாமன் வந்தான் பாடலின் வரிகளை கேட்ட இளையராஜா என்ன இப்படி எல்லாம் எழுதிருக்கீங்க என்று கேட்டார். எங்க நல்ல கிளுகிளுப்பாக தானே எழுதிருக்கேன் என்று சொன்னதும் இதையெல்லாம் நான் பாடமாட்டேன் என்று இளையராஜா சொன்னார்.
ஏன் பாடமாட்டீங்க என்று கேட்டதற்கு நான் மாலை போட்டிருக்கிறேன் என்றார். உடனே நான் நீங்க மாலை போட்டிருக்கிறீர்கள் என்பதற்காக நாங்கள் என்ன பக்தி படமா எடுக்க முடியும் என்று கேட்டேன். அதன்பிறகு ஏதேதோ சொல்லிவிட்டு பாட ஆரம்பித்துவிட்டார். அப்போது கடைசி லைன் பல்லவி பாடும் போது லைனை மறந்து ‘தந்தாந்னன்னா’ என்று பாடிவிட்டார். அதன்பிறகு கடைசி நேரத்தில் நீங்கள் பாடலை கொண்டு வந்ததால் எனக்கு வார்த்தை வரவில்லை என்று சொல்லிவிட்டு ஒன்மோர் டேக் எடுக்கலாம் என்றார். அதை மாற்றவில்லை அப்படி தான் இருந்தது” என்றார்.
தேன்மொழி






















