தேசத்தின் குரலுக்கு வேலணையில் நினைவுகூரல்
இலங்கை
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவு கூரல் நிகழ்வுகள் வேலணை வங்களாவடி பொது நினைவு சதுக்கத்தில் இன்று (14) இடம்பெற்றது.
குறித்த நினைவுகூரலை இன்று காலை (14) தீவக நினைவேந்தல் குழு ஏற்பாடு செய்து முன்னெடுத்திருந்தது.
முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமான குறித்த நினைவுகூரல் நிகழ்வில் தேசத்தின் குரலின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்து ஈகச் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலிக்கப்பட்டது.
இதன்போது ஏற்பாட்டுக் குழுவினருடன், ஊர்காவற்றுறை பிரதேச சபையின் உப – தவிசாளர் மற்றும் பொதுமக்களும் இணைந்து ஈழ விடுதலை போராட்டத்தின் அரசியல் இராஜதந்திரம் மிக்கவராக வலம் வந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களது நினைவுகளை மீட்டி அஞ்சலி செலுத்தியமை
குறிப்பிடத்தக்கது.























