• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம் – ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கை

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம், பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய விடயம் என்றும், அத்தகைய சவாலை எதிர்கொள்ளும் ஒவ்வொருவரும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான உறுதியுடன் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியமாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்விநிறுவனத்தில் இடம்பெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

கடற்படை மற்றும் கடல்சார் பயிற்சி நடவடிக்கைகளை நிறைவு செய்தவர்களுக்கான விசேட அணிவகுப்பு முப்படைகளின் தலைவர் , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்விநிறுவனத்தில் நேற்று இடம்பெற்றது.

பயிற்சி காலத்தில் திறமைகளை வெளிப்படுத்திய அதிகாரிகள் மற்றும் பதவி உயர்வு பெறுபவர்கள் ஜனாதிபதியினால் கௌரவ சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

அத்துடன் அனர்த்தத்தின் போது கடற்படையினரின் அர்ப்பணிப்புமிகுந்த பணிகளை ஜனாதிபதி பாராட்டியிருந்தார்

கிழக்கு மாகாண ஆளுநர் , பாதுகாப்பு பிரதி அமைச்சர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இராணுவத் தளபதி ,கடற்படைத் தளபதி விமானப்படைத் தளபதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,

அனர்த்தத்தின் போது கடற்படையினர் ஆற்றிய பங்கு மகத்தானது.

மரண பயத்தை அனுபவித்த மக்களுக்கு நம்பிக்கை அளித்து, இழக்கப்படவிருந்த ஏராளமான உயிர்களைக் காப்பாற்றிய கடற்படையினரின் பணி பாராட்டத்தக்கது.

இன்று நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலான போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து நாட்டை விடுவிப்பதில் கடற்படையினர் பெரும்பங்களிப்பு வழங்கிவருகின்றனர்.

போதைப்பொருள் கடத்தலில் இருந்து நாட்டைக் காப்பாற்ற அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும், இந்த அச்சுறுத்தலிருந்து தாய்நாட்டைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் .

ஒரு நாட்டை தமக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுவதன் மூலம் மாத்திரமே முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் .

எனவே, எந்தவொரு தொழிலையும் அல்லது பொறுப்பையும் இரண்டாம் பட்சமாகக கருதக்கூடாது .

ஒவ்வொரு பொறுப்பையும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அளிக்கப்படும் பங்களிப்பின் ஒரு பகுதியாகக் கருத வேண்டும்.

போதைப்பொருள் கடத்தலில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதுடன் அச்சுறுத்தலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என தெரிவித்தார்.
 

Leave a Reply