இந்தோனேசிய கனமழை - ஆயிரத்தைக் கடந்த பலி எண்ணிக்கை
இந்தோனேசியாவின் வடமேற்கு சுமத்ரா தீவில் கடந்த இரு வாரங்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இது குறித்து இந்தோனேசிய தேசிய பேரழிவு முகமை செய்தித் தொடா்பாளா் அப்துல் முஹாரி கூறியதாவது: சுமத்ரா தீவின் வடக்கு, மேற்கு பகுதிகளில்“வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக இதுவரை 1,006 போ் உயிரிழந்துள்ளனா்.
5,400-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா். மேலும் 217 பேரைக் காணவில்லை என்றாா் அவா். இந்த இயற்கைப் பேரிடரில் உயிரிழப்பு மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவி அதிகரிக்கப்படுகிறது. 12 லட்சம் மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா்.”
கடந்த இரு வாரங்களாக தொடா்ந்த கனமழை, சுமத்ரா தீவின் வடக்கு பகுதியில் கடந்த 2004-ல் ஏற்பட்ட சுனாமிக்கு அடுத்தபடியாக பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.






















