• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒன்டாரியோவில் இடம்பெற்ற துயரச் சம்பவம்

கனடா

ஒன்டாரியோ மாகாண கேம்பர்ஜ் நகரில், வாகனம் மோதியதில் மூன்று வயது சிறுமி உயிரிழந்த துயரச் சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த சமப்வத்தில் 31 வயது பெண் ஒருவர் கடுமையான காயங்களுக்கு உள்ளானாலும், உயிருக்கு ஆபத்தில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சிறுமியும் அந்த பெண்ணும் கேம்பர்ஜின் சீடர் ஸ்ட்ரீட் பகுதியில் வெஸ்ட்‌கேட் சென்டர் பிளாசா அருகே நடந்து சென்றபோது, ஒரு வாகன ஓட்டுநர் அவர்களை மோதியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமிக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டதுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதும் சற்றுநேரத்தில் உயிரிழந்தார்.

விபத்துக்குப் பிறகு சில மணி நேரங்களிலேயே, மக்கள் மலர்களும் பொம்மைகளும் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

வாகனம் ஓட்டியவர் கேம்பர் ஜில் பகுதியில் வசிக்கும் 75 வயது ஆண் எனவும் அவருக்கு எந்த காயமும் இல்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்து குறித்து மேலதிக தகவல்கள், காரணங்கள் அல்லது குற்றச்சாட்டுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. 
 

Leave a Reply