மீண்டும் அஜித்தை வைத்து படம் இயக்கும் சிறுத்தை சிவா
சினிமா
நடிகர் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய ஹிட் படங்களை கொடுத்தவர் சிறுத்தை சிவா. விவேகம் படம் மட்டும் சொதப்பியது.
தொடர்ந்து சூர்யாவை வைத்து சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா படமும் பிளாப் ஆனது. இதன்பின் புதிய படங்களை இயக்காமல் இருந்த சிவா பொதுவெளியில் அதிகம் காணப்படவில்லை.
இந்நிலையில் மலேசியாவில் கார் பந்தயத்திற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வரும் அஜித் குமாருடன் சிறுத்தை சிவா கடந்த சில நாட்களாக நேரம் செலவிட்டு வருகிறார். அங்கு அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவுடன் சிறுத்தை சிவா இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இதனால் சிறுத்தை சிவா அஜித்துக்கு கதை சொல்ல அங்கு சென்றுள்ளதாகவும், இருவரின் கூட்டணியில் புதிய படம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் ஊகங்கள் எழுந்துள்ளது.
அஜித்தின் ரேஸிங் வாழ்க்கை பற்றி ஆவணப்படம் ஒன்று உருவாக இருப்பதாக தகவல்கல் வெளியாகி வந்த நிலையில் அந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
குட் பேட் அக்லி வெற்றிக்கு பிறகு அஜித் அடுத்ததாக மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.























