• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரொரன்றோவில் சாரதி பயிற்றுனர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் ? நகரசபைக்கு முன்னெடுக்கப்படும் முறைப்பாடுகள் 

கனடா

கனடா - ரொரன்றோ நகரில் பணி புரியும் சாரதி பயிற்றுனர்கள் நகரசபையால் நடைமுறைபடுத்தப்படும் சில சட்ட, ஒழுங்கு முறைகளால் எதிர்கொள்ளும் பாதிப்புகள் யாவை ?

நகரில் நீண்ட காலமாக சாரதி பயிற்றுனர் தொழில் செய்யும் திரு.பிரபாகரன் மற்றும் திரு.ஜெயக்குமார் ஆகியோரின் தலைமையில் கடந்த டிசம்பர்/04/2025ல் நகரசபை உறுப்பினர் திரு.நீதன் சண் அவர்களின் அலுவலகத்தில், ரொரன்றோவின்  சாரதி பயிற்றுனர் குழு ஓன்று ஓர் சந்திப்பினை நடத்தினார்கள்.

அங்கு இவ் குழுவினரால் பின்வரும் ஐந்து அம்ச கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

(1)  வாகனமோட்டும் பயிற்சி வழங்க கூடாது என குறிப்பிடும் தடை செய்யப்பட்ட பிரதேசங்களில் சாரதி பயிற்றுனர் ஒருவர் தமது வாகனத்தினை செலுத்திய நிலைமையில் பயிற்சி பெறுபவரை சேர்த்து அழைத்து செல்லும்போது அது சட்ட மீறலாக கருத கூடாது.
(When driving instructor is behind the wheel with driving student  is not the violation of law)


இந்த குற்றச்சாட்டில் தமிழ் சாரதி பயிற்றுனர் ஒருவர் ஏற்கனவே அப்பீல் நீதிமன்றம் வரை சென்று தீர்ப்பினையே புரட்டி போட்ட ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்ட போது, இந்த கோரிக்கை உடனடியாக நிறைவேற்றுவதில் தடை இருக்காது என உறுதிமொழி  வழங்கப்பட்டது .
 

(2) "Metro East" என்ற வீதி பரிட்சை நிலையத்தின் தடை செய்யப்பட்ட எல்லைகள் மாற்றியமைக்கப்படல் வேண்டும்.
(Readjust the restricted areas boundaries around Metro East test center.) 
 

(3) பாடசாலைகளுக்கு அருகே உள்ள வீதிகள் வாகனமோட்டும் பயிற்சி வழங்குவதற்கு தடை செய்யப்பட்டது என்ற சட்ட மூலங்களில் திருத்தங்கள் செய்யப்படல் வேண்டும்.
(Amend the school zones restricted areas)

மேலே, 2வது மற்றும் 3வது இலக்கங்களில் குறிப்பிட்ட இரு கோரிக்கைகளும் நகரசபையின் கவனத்துக்கு எடுத்து செல்லப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டது.
 

(4) சில இடங்களில் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் நகரசபை சட்ட அமலாக்கல் பிரிவினர் எச்சரிக்கை செய்யப்படல் வேண்டும்.
(Bylaw enforcement officers must be caused to not overruled) 

இவ்வாறு இனிமேல் காலங்களில் நடந்தால் தமது அலுவலகத்துக்கு கால தாமதமில்லாமல் முறைப்பாடு வழங்குமாறு அறிவுரை வழங்கப்பட்டது. 

(5) வீதி பரிட்சைகளுக்கு திகதி நிர்ணயம் செய்து விட்டு, எதுவிதமான முன் அறிவிப்பும் இல்லாது இறுதி நேரத்தில் ரத்து செய்வது நிறுத்தபடல் வேண்டும்.

(Unnecessary road test cancellations must be rectified ) 

இவை பற்றி சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கு  முன் எடுப்பதாக உறுதி மொழி வழங்கப்பட்டது . 

சந்திப்பும் பேச்சு வார்த்தைகளும் இனிதே முடிவடைந்ததை தொடர்ந்து, முடிவில் ரொரன்றோ நகரில் பிரபல்யமான சாரதி பயிற்றுனர் திரு.செல்லத்துரை - சபாரத்தினம் அவர்கள் நகரசபை உறுப்பினர் திரு.நீதன் சண் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
 

Leave a Reply