ஒரே நாளில் வெளியான கேப்டன், விஜய், அஜித் படங்கள்
சினிமா
ஒரே நாளில் வெளியான கேப்டன், விஜய், அஜித் படங்கள்; மூன்றுமே பெரிய ஹிட்டு: என்னென்ன படம், எப்போ ரிலீஸ் ஆச்சு தெரியுமா?
விஜயகாந்த், அஜித், விஜய் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளது. அது எந்த படங்கள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ் திரையுலகில் 89 -90களில் விஜயகாந்த், விஜய், அஜித் உட்பட பலர் முன்னணி நடிகர்களாக வலம் வந்தனர். இந்நிலையில், கடந்த 2002-ஆம் ஆண்டு தீபாவளி அன்று இவர்கள் மூன்று பேரின் படம் ஒரே நேரத்தில் ரிலீஸாகி பெரும் வெற்றி பெற்றுள்ளது. அதாவது விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘ரமணா’, அஜித் நடிப்பில் வெளியான ‘வில்லன்’, விஜய் நடிப்பில் வெளியான ‘பகவதி’ 3 படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இயக்குனர் ஏ.வெங்கடேஸ் குமுதம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “பகவதி திரைப்படம் அந்த காலக்கட்டத்தில் ரிலீஸாகி சூப்பராக போனது. இதை திருப்பூர் சுப்ரமணியம் எனக்கு போன் செய்து சொன்னார். தமிழ் சினிமாவில் ஒரு தீபாவளிக்கு 3 படம் ரிலீஸாகி மூன்றுமே ஹிட்டானது. கேப்டன் விஜயகாந்த் நடித்த ‘ரமணா’, விஜய் நடித்த ‘பகவதி’, அஜித் நடித்த ‘வில்லன்’ திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகி மூன்றுமே ஹிட்டானது. இந்த மூன்று திரைப்படங்களுமே நல்ல வசூல் செய்தது.
இந்த மூன்று திரைப்படத்தில் எந்த படம் வசூலில் முந்தப் போகிறது என்று வெளியீட்டாளர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், எல்லாமே சம அளவு வசூலில் தான் இருந்தது. ஒரு லட்சம், இரண்டு லட்சம் வித்தியாசம் இருந்திருக்கலாம். ஆனால், மூன்று படமும் ஈக்குவல் வசூலில் தான் இருந்தது. ’பகவதி’ படத்திற்கு பிறகு நடிகர் விஜய் உடன் இரண்டு படங்கள் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்தது.
ஆனால், நான் வேறு படங்கள் கமிட்டாகி விட்டதால் நடிக்கவில்லை. ‘திருமலை’ திரைப்படம் நான் பண்ண வேண்டிய படம் தான் அப்போது நான் சிம்பு நடித்த ‘தம்’ திரைப்படம் கமிட்டாகிவிட்டேன். அப்போது விஜய் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு வாருங்கள். ‘பகவதி’ மாதிரி பெரிய படம் செய்யலாம் என்றார், இருந்தாலும் நான் கமிட்டாகி விட்டதால் அதை முடித்துக் கொண்டு வருகிறேன் என்றேன். அதற்குள் விஜய் வேறு இயக்குனரை வைத்து படம் இயக்கிவிட்டார்.
‘ஏ’ படம் கமிட்டாகி ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கும் பொழுது மறுபடியும் விஜய் அழைத்தார். அப்போது நான் ‘ஏய்’ படத்தின் படப்பிடிப்பிற்கு சென்று கொண்டிருந்தேன். அப்படி விஜய் நடித்த படம் தான் ‘மதுரை’ திரைப்படம். அதன்பிறகு, ‘போக்கிரி’ நேரத்தில் நான் விஜய் சாரிடம் கதை சொல்லி எல்லாம் ஓகேயாகிவிட்டது. அந்த படத்திற்கு எஸ்.ஏ.சந்திர சேகர் தான் தயாரிப்பாளராக இருந்தார். அந்த நேரத்தில் ‘போக்கிரி’ படத்தின் ரீமேக்கில் நடிக்க விஜய் முடிவு செய்துவிட்டார். அதன்பின்னர், இதை கதை பற்றி நான் விஜய்யிடம் பேசவில்லை” என்றார்.























