• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புரட்சித்தலைவர் முதல்வர் ஆன பிறகு அமெரிக்க நாட்டின் விருந்தினர் ஆக அங்கே சென்றார்....

அப்போ அமெரிக்காவில் அங்கே இருந்த பழனி
P. பெரியசாமி தலைவர் உடனே இருந்தார்...
பால்டிமோர் நகரில் தலைவர் தங்கி இருந்த போது தமிழ்நாட்டில் இப்போ வந்து இருக்கும் மெட்ரோ ரயில் திட்டம் போல ஒன்றை கொண்டு வர விரும்பி அங்கே உள்ள மின்சார ரயிலில் பயணம் செய்து பார்க்க விருப்பம் கொண்டு......
பாலடிமோர் முதல் நியூயார்க் வரை போகும் அந்த மின் ரயிலில் பயணம் ஏற்பாடு.....
ரயில் நிலையம் பிளாட் போரம் அதில் நுழைய போகும் நேரத்தில் ஒரு பெண் தன் கை குழந்தை உடன் மகான் எம்ஜிஆர் நோக்கி அரக்க பறக்க நடந்து மூச்சு வாங்கி வந்தார்....
அந்த பெண்மணி தன்னை நோக்கி வருவதை உணர்ந்த வாத்தியார் சட்டுனு நின்றார்.....
அந்த பெண்மணி மூச்சு வாங்க ஐயா நீங்கள்
இன்று இப்போ ரயில் பயணம் என்பதை அமெரிக்க தூதரகம்
அதில் தெரிந்து கொண்டு..
ரிச்மாண்ட் என்ற இடத்தில் இருந்து மூன்றரை மணி நேரம் நானே செல்ப் டிரைவ் பண்ணி குழந்தை உடன் உங்களை பார்க்க வந்தேன்....
பார்த்து விட்டேன் மகிழ்ச்சி சார் என்ற உடன் தலைவர் நெகிழ்ச்சி அடைந்து என்ன இப்படி தனியே வரலாமா அதுவும் குழந்தை கொண்டு..
குழந்தை அதை தூக்கி கொஞ்சி மகிழ்ந்து அந்த தாய் சேய் இருவரையும்
அருகில் நிற்க வைத்து புகைப்படம் எடுக்க சொல்லி....
சென்னை வரும் போது என் வீட்டுக்கு கணவர் மற்றும் குடும்பம் சூழ வாங்க ம்மா என்கிறார்.
இந்த பெண்மணி முகவரி வாங்கி கொண்டு எடுத்த படங்களை அவங்க முகவரி அதற்கு அனுப்ப
ஏற்பாடு செய்கிறார்..
அருகில் இருந்த தொழில்
அதிபர் பழனி பெரியசாமி பார்த்து போவோமா ரயிலுக்கு என்று கேட்க..
அவரோ அந்த ரயில் கடந்து போய் பல நிமிடங்கள் ஆச்சு...

சரி அடுத்த ரயில் வரும் இல்லே அதில் போவோம் என்கிறார்...
ரயில் வரும் போகும் அங்கும் இங்கும் ஆனால் அவ்வளவு தொலைவில் இருந்து என்னை பார்க்க வந்தவர் ஏமாற்றம் அடைந்து இருந்தால்
என் மீது எவ்வளவு கோவம் வரும்...
வாங்க பிளாட் பாரம் அதில் நின்று வேடிக்கை பாப்போம் என்கிறார் குழந்தை போல
எம்ஜிஆர்...
இமயம் போல எழுந்து நின்றார் என் மனதில் அப்போ அவர் என்கிறார்
பழனி பெரியசாமி ஐயா...
அமெரிக்க நிகழ்வுகள் தொடரும்...
வாழ்க தலைவர் புகழ்
உங்களில் ஒருவன்
நெல்லை மணி...
பால்டி மோர் அமெரிக்க ரயில் நிலையத்தில் எடுத்த புகைப்படம்

பதிவில்... நன்றி...
 

Leave a Reply