• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் பல்வேறு போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

இலங்கை

யாழ்ப்பாணத்தில் கஞ்சா கலந்த மாவா மற்றும் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் , நகரை அண்டிய பகுதியில் போதை பொருள் விற்பனையில் நபர் ஒருவர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது, 2 கிலோ 750 கிராம் கஞ்சா கலந்த மாவா பாக்குடனும் 50 போதை மாத்திரைகளுடனும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply