நாடாளுமன்றத்திற்குப் புறம்பான வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிரக்கவும் – சபாநயாகர்
இலங்கை
சக உறுப்பினர்களை குறிவைத்து தகாத கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை தவிர்க்குமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் உறுப்பினர்களுக்கு அறிவிப்புகளை வழங்கும் போது சபாநாயகர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
அண்மைக் காலமாக நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போது இதுபோன்ற நடத்தை அடிக்கடி காணப்படுகின்றன.
இது சபைக்கு அவமரியாதையை ஏற்படுத்துக்கின்றது.
எனவே, நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போது சபைக்கு புறம்பான வார்த்தைகளை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் இந்த விடயத்தில் எம்.பி.க்கள் தங்கள் ஆதரவை வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.






















