• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

இலங்கை

2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.

அதன்படி இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

8 பேர் வாக்களிப்பில் இருந்து விலகினர்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்களான மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஸ்ணன் ஆகியோர் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

மேலும் இன்றைய வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பில் இலங்கை தமிழரசு கட்சி கலந்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply