யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மருத்துவ பீடத்திற்கு சிறப்பு தேர்ச்சியில் சாதனை
இலங்கை
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மருத்துவ பீடத்திற்கு சிறப்பு தேர்ச்சியில் தெரிவாகிய மாணவர்களின் அளவில் சாதனை படைத்துள்ளது.
2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி, நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக நுழைவுக்கான மாணவர்களின் மருத்துவ பீட விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய இலங்கை முழுவதும் 333 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு சிறப்பு தேர்ச்சியில் தெரிவாகியுள்ளனர். அதன்படி இலங்கையில் 18 பாடசாலைகளில் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கையில் மாணவர்கள் சிறப்பு தேர்ச்சியில் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
கொழும்பு ஆண்கள் பாடசாலையான ரோயல் கல்லூரி மற்றும் பெண்கள் பாடசாலையான விசாகா வித்தியாலத்தில் 75 வீதமான மாணவர்கள் சிறப்பு தேர்ச்சியில் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
மேலும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகிய மாணவர்களில் சிறப்பு தேர்ச்சியில் தெரிவாகிய மாணவர்களின் சதவீதம் 85.19 எனும் அதிகூடிய அளவை பதிவு செய்துள்ளது.






















