டான் இயக்குநருடன் மீண்டும் இணையும் SK
சினிமா
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக 'மதராஸி' வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
'மதராஸி' படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவருகிறார். ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாக உள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14-ந்தேதி வெளியாக உள்ளது.
இதற்கிடையே, சிவகார்த்திகேயன் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். மேலும் 'டான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்திலும் நடிக்க உள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா நடிக்க உள்ளதாகவும் இப்படத்தில் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.























