• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் வீடுகளுக்குள் புகுந்து தகாத செயலில் ஈடுபட்டவர் கைது

கனடா

கனடாவின் ஒஷாவா (Oshawa) நகரில் பல வீடுகளில் புகுந்து பெண்களை பாலியல் ரீதியாகத் தாக்கியதாகக் கூறப்படும் 28 வயது ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒன்டாரியோ மாநிலத்தின் டர்ஹாம் பொலிஸார் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் நவம்பர் 11 ஆம் திகதி பிற்பகல் 4.20 மணியளவில் சிம்கோ தெரு தெற்கு (Simcoe Street South) மற்றும் ராயல் தெரு (Royal Street) பகுதிகளில் இடம்பெற்றுள்ளது.

முதலில், குற்றவாளி ஒரு வீட்டிற்குள் நுழைந்து மோசமாக நடந்து கொள்ள முயன்றார் ஆனால், அங்கு இருந்த நாயால் பயந்த அவர் விரைவில் தப்பி ஓடிவிட்டார்.

அதைத்தொடர்ந்து, அதே தெருவில் உள்ள மற்றொரு வீட்டிற்குள் நுழைந்த அவர், அங்கு இருந்த வீட்டின் பெண் உரிமையாளரைத் தாக்கி பாலியல் ரீதியாகத் தாக்குதல் நடத்தியதாகக் காவல்துறை கூறியுள்ளது.

அதன்பிறகு, குற்றவாளி சிம்கோ மற்றும் ஃபேர்‌பேங்க்ஸ் (Fairbanks) தெருக்கள் சந்திக்கும் பகுதியில் உள்ள மூன்றாவது வீட்டிற்குள் புகுந்து, அங்கு படுக்கையிலிருந்த மூதாட்டியை பாலியல் ரீதியாகத் தாக்கி, ஜன்னல் வழியாக தப்பியோடியுள்ளார்.

தொடர்ந்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் குற்றச்சாட்டுக்குட்பட்ட நபரை சில நிமிடங்களுக்குள் கைது செய்தனர்.

இக்குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை எனவும், கூடுதல் தகவல் அல்லது கண்காணிப்பு காட்சி உள்ளவர்கள் காவல்துறையுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 
 

Leave a Reply