மூன்று முதல்வர்களை ஒன்றிணைத்த கே.பி.எஸ்.
சினிமா
கொடுமுடி கோகிலம் என்று அழைக்கப்பட்ட கே.பி.சுந்தராம்பாள் தான், காங்கிரசால் 1958ல் தமிழக மேலவை உறுப்பினராக்கப்பட்டு, அரசியல் பொறுப்பில் அமர்த்தப்பட்ட முதல் திரைப்படக் கலைஞர்.
நாடகங்களில் நடித்துப் பிரபலமாகி, சினிமாவில் நந்தனார், ஔவையார், கவுந்தி அடிகள் என்று பல்வேறு பாத்திரங்களில் நடித்த இவர், 1953-ல் நடித்த படம் ‘ஔவையார்’.
ஜெமினி தயாரிப்பில் வெளிவந்த இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மட்டும் 48.
முருகனிடமே சுட்டபழம் கேட்டவராக ‘திருவிளையாடல்’ பாடத்தில் இவர் உச்சபட்சக் குரலில் பாடிய “பழம் நீயப்பா…’’ மிகவும் பிரபலம்.
தன்னுடைய சொந்த ஊரான கொடுமுடியில் திரையரங்கைக் கட்டித் துவக்க விழா நடந்தபோது அதில் கலந்து கொண்டவர்கள் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா மூன்று பேரும் என்பது சிறப்பு.
கே பி சுந்தராம்பாள் அவர்கள் கொடுமுடியில் கட்டிய சினிமா தியேட்டரை திறப்பு விழா செய்ய ஜீப்பில் புறப்படும், மு கருணாநிதி, மக்கள் திலகம் எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா ஆகியோருடன் கே.பி.சுந்தராம்பாள்.






















