• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்.ஜி.யார். பெயரில் மன்றம் அமைத்து சேவை செய்து வந்தால் ஒரு சிறைச்சாலையை மூடுவதற்கு சமம் - கி.ஆ.பெ.விஸ்வநாதன்

சினிமா

எம்.ஜி.யார். பெயரில் மன்றம் அமைத்து சேவை செய்து வந்தால் ஒரு சிறைச்சாலையை மூடுவதற்கு சமம்". கி.ஆ.பெ.விஸ்வநாதன்.

* தந்தை பெரியார்:
எம்.ஜி.ஆருக்கு ரொம்ப பெரிய மனசு.ஏழைகளுக்கு உதவும் கருணை உள்ளம் கொண்டவர்.

*பேரறிஞர் அண்ணா:
எனது அருமைத் தம்பி எம்.ஜி.ஆரின் உருவம் சிறியது. ஆனால் உள்ளம் பெரியது. அவர் கழகத்தின் கண்மணி. கலை உலகின் நன்மணி. குணத்தில் தங்கம். கொதித்தால் சிங்கம்.

*டாக்டர் மு.வரதராசனார்:
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் வேலிகளை மூன்று பக்கமும் வைத்து நான்காவது பக்கம் பொது நலம் என்ற அரண் கட்டி வாழும் நல்லவர்தான் எம்.ஜி.ஆர்.

*அன்னை தெரசா:
மக்கள் ஒவ்வொருவரும் மனிதநேய உணர்வுடன் அன்புடன் உதவ வேண்டும் என்று ஏசு கிறிஸ்து கூறினார். அவர் வழியில் திரு.எம்.ஜி.ஆர். செயல்படுகிறார்.

*முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்:
மனிதத் தங்கம் ராமச்சந்திரன். நல் வழியில் சம்பாதித்த பணத்தை நல்ல வழியில் செலவிடுகிறார். அவர் பெயரில் மன்றம் அமைத்து சேவை செய்து வந்தால் ஒரு சிறைச்சாலையை மூடுவதற்கு சமம்.

*திரு. ஜான் மெக்காலம், ஆஸ்திரேலிய படத் தயாரிப்பாளர், நடிகர்:
இந்தியத் திரை உலகில் நிரந்தரமான ஓரிடத்தை எம்.ஜி.ஆர்.பிடித்திருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவருடைய இயற்கையான நடிப்பு.....
 

Leave a Reply