அரசாங்க நிதி மசோதாவில் ட்ரம்ப் கையெழுத்து - முடிவுக்கு வந்த 43 நாள் பணிநிறுத்தம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், நவம்பர் 12-ஆம் திகதி இரவு, வாஷிங்கடனில் உள்ள வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் அரசாங்க நிதி மசோதாவில் கையெழுத்திட்டார்.
இதன்மூலம் 43 நாட்கள் நீண்ட அரசாங்க பணிநிறுத்தம் முடிவுக்கு வந்தது.
இந்த இடையூறு காலத்தில், கூட்டாட்சி பணியாளர்கள் சம்பளம் இன்றி வாழவேண்டிய நிலை ஏற்பட்டது.
பல விமான நிலையங்களில் பயணிகள் கடுமையான தாமதங்களை எதிர்கொண்டனர்.
உணவு உதவி திட்டங்கள் காலாவதியானதால், சில உணவு கிடங்குகளில் நீண்ட வரிசைகள் உருவானது.
ட்ரம்ப் எடுத்த ஒரு தலைப்பட்ச நடவடிக்கைகள் வாஷிங்டனில் கட்சி பிளவுகளை மேலும் தீவிரப்படுத்தின. கூட்டாட்சி தொழிலார்கள் பணிநீக்கம் செய்யும் முயற்சிகள், திட்டங்களை ரத்து செய்தாழ் போன்ற நடவடிக்கைகள் ஜனநாயகக் கட்சியினரின் எதிர்ப்பை தூண்டின. அவர்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு தள்ளுபடி பெரும் வகையில் அழுத்தம் கொடுத்தனர்.
இந்த நீண்ட பணிநிறுத்தம் அமெரிக்க அரசியல் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜனநாயக கட்சியினர் குடியரசு கட்சியினரை விடுமுறைக்கு செல்வதாக சித்தரித்து அரசியல் ஆதாயம் பெற்றனர். அதேசமயம், பொதுமக்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இரண்டு முக்கிய கருத்துக்கணிப்புகள், ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை சுட்டிக்காட்டுகின்றன. இதனால், ட்ரம்ப் நிர்வாகம் அரசியல் ரீதியாக சவால்களை எதிர்கொள்கிறது.
மொத்தத்தில், 43 நாள் நீண்ட அரசாங்க பணிநிறுத்தம், அமெரிக்க அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக மதிப்பிடப்படுகிறது.






















