இது கெம்பா எனெர்ஜி - அஜித் குமார் ரேஸிங் அணியுடன் ரிலையன்ஸ் குழுமம் ஒப்பந்தம்
சினிமா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .
கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
இந்நிலையில், 'அஜித் குமார் ரேஸிங்' அணியின் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னர் ஆக ரிலையன்ஸ் குழுமத்தின் 'கெம்பா' குளிர்பான நிறுவனம் ஒப்பந்தம் ஆகியுள்ளது.
இந்த ஒப்பந்த அறிவிப்பில்"இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் அணிகளில் ஒன்றான அஜித் குமார் ரேஸிங் அணி", என ரிலையன்ஸ் குழுமம் குறிப்பிட்டுள்ளது.























