• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ராமாயி மட்டுமா இன்றும் பலரின் மனதில்...

சினிமா

திருப்பூர் குமரனின் மனைவி ராமாயி அம்மாள் திருப்பூர் கஜலட்சுமி தியேட்டரில் திரையிடப்பட்ட 'ராஜபார்ட் ரங்கதுரை' படத்தைப் பார்க்க விரும்பினார்.

அந்தப் படத்தில் சிவாஜி, திருப்பூர் குமரனாகச் சில நிமிடங்கள் நடித்திருப்பார். குமரன் இறந்து விழும் காட்சியில், அவர் நடிப்பு தத்ரூபமாக இருக்கும்.

அந்தக் காட்சியைப் பார்த்த ராமாயி அம்மாள் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். பிறகு கேட்டபோது, 'என் புருஷன் முகமே எனக்கு மறந்து போச்சு. என் சின்ன வயதிலேயே அவர் செத்துட்டாரு. சிவாஜி நடிச்சப்போ, என் புருஷன்தான் செத்துட்டாரு ன்னு மயக்கம் போட்டு விழுந்துட்டேன்' என்று விளக்கினார் அவர்.

ராமாயி மட்டுமா இன்றும் பலரின் மனதில்

தந்தையாய் அண்ணனாய் காவல்துறை அதிகாரியாய் இன்னும் பல வடிவங்களில் வாழ்ந்து வருகிறார் .

நன்றி ! திரு.Subramani

Leave a Reply