கிரிந்த பகுதியில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் – பொலிசாரின் மேலதிக தகவல்கள்
இலங்கை
கிரிந்த பகுதியில் இன்று (12) கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பாக பொலிஸார் மேலதிக தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதன்படி குறித்த பகுதியில் 345 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அந்த சம்பவம் தொடர்பில் 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவும் தெற்கு மாகாண பொலிஸ் குழுவும் இணைந்து கிரிந்த பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது ஐஸ் ரக போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் கைதாகியிருந்தனர்.
இந்தநிலையில் சந்தேகநபர்கள் பயன்படுத்திய 6 வாகனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் போதைப்பொருள் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.























