விசேட சோதனையில் பெருந்தொகை போதைப்பொருளுடன் அறுவர் கைது
இலங்கை
கிரிந்த பிரதேசத்தில் பெருந்தொகையான போதைப்பொருளுடன் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவும் தெற்கு மாகாண பொலிஸ் குழுவும் இணைந்து கிரிந்த பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது பெருந்தொகையான போதைப்பொருளுடன் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து 300 கிலோகிராம்களுக்கும் அதிகமான ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் போதைப்பொருள் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.























