• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான இராணுவ விமானம்

துருக்கிக்கு சொந்தமான நேட்டோ இராணுவ விமானம் ஒன்று இன்று (11) ஜோர்ஜியா மற்றும் அசர்பைஜான் எல்லையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

அசர்பைஜானில் இருந்து புறப்பட்ட C-130 விமானம் துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் 20 பணியாளர்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை.

இதேவேளை உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணியில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply