ரஜினி கேங் படத்தின் டிரெய்லரை வெளியிடும் விஷ்ணு விஷால்
சினிமா
நடிகர் ரஜினி கிஷன் மற்றும் திவிகா நடிக்கும் படம் ரஜினி கிங். இப்படத்தை ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். மேலும் மொட்டை ராஜேந்திரன், ராம் தாஸ், கூல் சுரேஷ், கல்கி ராஜா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைக்கிறார். இப்படத்தை மிஷ்ரி என்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நாளை காலை 11.55 மணிக்கு வெளியாகிறது. இப்படத்தின் டிரைலரை நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் வெளியிடுகிறார்.






















