ஜன நாயகன் படத்தின் முதல் சிங்கிள் கொண்டாட்டம் - தியேட்டரில் பட்டாசை தூக்கியெறிந்த ரசிகர்
சினிமா
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் எனவும் அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடபோவதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
இந்நிலையில், 'தளபதி கச்சேரி' எனத் தொடங்கும் முதல் பாடல் நேற்று வெளியானது.
இந்த வீடியோவில் விஜய் நடிப்பில் வெளியான ஹிட் படங்களின் பாடல்கள் மீண்டும் நினைவுக்கு கொண்டு வரும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. இப்பாடலை விஜய்,அனிருத் மற்றும் அறிவு ஆகியோர் பாடியுள்ளனர்.
'ஜன நாயகன்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானதை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அம்பத்தூர் ராக்கி திரையரங்கில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் மீது ரசிகர் ஒருவர் பட்டாசை வெடித்து தூக்கியெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






















