அகிலம் அதிருதா..! - தலைவர் 173 அறிவிப்பு வீடியோ வெளியீடு
இலங்கை
தமிழ் சினிமாவின் மூத்த முன்னணி ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. பின்னர் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இதை உறுதிப்படுத்தினர்.
அதன்படி, ரஜினியின் 173வது படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கவுள்ளார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.
கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் முதல் படமாக இது அமைய உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு துவங்கவுள்ளது. இந்நிலையில் படத்தின் துவக்கம் தொடர்பாக ரஜினி- கமல் - சுந்தர்.சி சந்தித்த வீடியோவை தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.
இப்படம் 2027 பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1997ல் ரஜினிகாந்தின் 'அருணாச்சலம்' படத்தை இயக்கிய சுந்தர்.சி. 28 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினியின் 173வது படத்தை இயக்க உள்ளது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கமல் ஹாசனின் அன்பே சிவம் படத்தையும் சுந்தர் சி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.























