• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அண்ணாவைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குப்போயிருந்தார் காமராஜர் 

சினிமா

உடல்நலம் குன்றிய நிலையில் இருந்த அண்ணாவைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குப்போயிருந்தார் காமராஜர் . உடல் மெலிந்து, கண்கள் ஒளி இழந்து, உணவை விழுங்கக்கூட முடியாமல் கிள்ளிக்கிள்ளி எடுத்து வாயில் போட்டு மிகுந்த சிரமத்துடன் விழுங்க முடியாமல் திணறினார் அண்ணா. இதைப்பார்த்த காமராஜருக்கு மனம் பொறுக்கவில்லை.

"அவரு உடம்புக்கு என்னென்னே இன்னமும் கண்டு பிடிக்கலியா? ரொம்ப லட்சணமாயிருக்கு. நீங்கள்ளாம் நெறைய படிச்சது எதுக்கய்யா? உங்கள்ளே யாரு முக்கியம்கிறது பெரிசில்லை. இவருயாரு தெரியுமில்லே. முதல்-அமைச்சர். இவருதான் இப்ப முக்கியம். டாக்டர்கள் அவங்க அவங்களுக்குண்டான பொறுப்பை எடுத்துகிட்டு டீம் ஒர்க் பண்ணுங்க.

கவனமாய் பாருங்கண்ணுதானே சொல்றேன். கவர்ன் மென்ட்லே பண்றமாதிரி பேப்பர்ங்களே மேலேயும் கீழேயும் அனுப்பிகிட்டு இருக்காதீங்க. எதை செய்தா இவருக்கு நல்லதோ அதை உடனே செய்யுங்க. எது வேணுமோ அதைக் கேட்டு வாங்குங்க.
தயங்காதீங்க... பயப்படாதீங்க..'' என்று உரக்கக் கட்டடமே அதிரதன் கோபத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினார்.
இதன் பின்னரே அண்ணா அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அதற்கென உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. அமெரிக்க நிபுணர்களின் சிகிச்சையும் பெறப்பட்டது.

Chandran Veerasamy

Leave a Reply