மரக்கறிகளின் விலையில் கணிசமான உயர்வு
இலங்கை
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலை கணிசமாக அதிகரித்துள்ளன.
ஒரு கிலோ கரட் இப்போது ரூ.700 முதல் ரூ.1,000 வரை விற்கப்படுகிறது.
அதேபோல், போஞ்சி மற்றும் லீக்ஸ் ஒரு கிலோவுக்கு ரூ.500 முதல் ரூ.800 வரை விற்கப்படுகின்றன.
முன்பு சுமார் ரூ.30க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சுரக்காய், தற்போது ரூ.100 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது.
கனமழை மற்றும் மண்சரிவுகளால் மரக்கறி விலை நிலங்கள் பெருமளவில் சேதமடைந்ததால் விலைகள் அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மையத்தின் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.






















