கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்
இலங்கை
இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்குள் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் செல்ல வேண்டாம் என்று முன்னர் விடுக்கப்பட்ட எச்சரிக்கை மீளப் பெறப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
காங்கேசன்துறைக்கு வடகிழக்கே சுமார் 300 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாட்டிலிருந்து விலகி வடக்கு நோக்கி நகர்ந்து மேலும் பலவீனமடைய வாய்ப்புள்ளதால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, களுத்துறையிலிருந்து காலி மற்றும் மாத்தறை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை வழியாக மன்னார் வரையிலான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும்.
காற்றின் வேகம் மணிக்கு 25-35 கி.மீ. வரை இருக்கும்.
புத்தளம் முதல் காங்கேசன்துறை வழியாக திருகோணமலை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.






















