• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் போதைப்பொருள் நுகர்வில் ஈடுபட்ட மூவர் கைது

இலங்கை

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று பேர் நேற்றையதினம் (7) பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது போதைப்பொருளை நுகர்வதற்காக பயன்படுத்தப்பட்ட மருத்துவ ஊசி, ஹெரோயின் உள்ளிட்ட சில பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

யாழ்ப்பாணம் பொலிஸ் போதைதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் மஞ்சுள கருணாரத்ன தலைமையிலான குழுவினரின் சோதனை நடவடிக்கைகளின் கைது நடவடிக்கை நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

நல்லூர் பகுதியைச் சேர்ந்த 30 வயதான இளைஞரும் அரியாலை பகுதியைச் சேர்ந்த முறையே 30 மற்றும் 32 வயதான இரண்டு இளைஞர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் கைதான சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 

Leave a Reply