உலகம் முழுவதும் அமைதியை விரும்புகின்றேன் - டொனால்ட் ட்ரம்ப்
உலகம் முழுவதும் அமைதியை விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுத ஒழிப்பு ஒரு சிறந்த விடயமாக இருக்கும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து, ரஷ்ய ஜனாதிபதி மற்றும் சீன ஜனாதிபதி ஆகியோரிடம் தாம் ஏற்கனவே பேசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதத் திறன்களில் அமெரிக்கா முதலிடத்திலும், ரஷ்யா மற்றும் சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன, இதற்கு எந்தத் தேவையும் இல்லை.
முன்னணி நாடுகள் கணிசமான அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன, நிதியை அதிக நன்மை பயக்கும் முயற்சிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.






















