வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தை மேம்படுத்த 350 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு
இலங்கை
பாதுகாப்பான கடற்பயணங்களை உறுதிப்படுத்தல் மற்றும் துறைமுகங்களில் காணப்படும் நெரிசல்களை குறைத்தல் என்பனவற்றை இலக்காகக் கொண்டு வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு 350 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடப்படும் என ஜனாதிபதி தொிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் தற்போது ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்படும் நிலையில் அதில் அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.






















