• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வரவுசெலவுத்திட்ட விவாதம் நவம்பர் 8 முதல் டிசம்பர் 5 வரை 23 நாட்கள் இடம்பெறும்.

இலங்கை

2026 வரவு-செலவுத் திட்டம்; நிதி, சுகாதாரம், பாதுகாப்புக்கு அதிக ஒதுக்கீடு

2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் நாளை (07) பி.ப. 1.30 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 8 முதல் 14 வரை – இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு நடைபெறும்.

குழுநிலையின் போதன விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை – மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு நடைபெறும்.

இது இலங்கையின் வரலாற்றில் 80 ஆவதும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவதும் வரவு செலவுத் திட்டமாகும்.

மேலும் வரவிருக்கும் நிதியாண்டிற்கான மொத்த அரசாங்க செலவினம் ரூ. 4,434 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சுகள், திணைக்களங்களுக்கான விரிவான ஒதுக்கீடுகளை உள்ளடக்கிய ஒதுக்கீட்டு சட்டமூலம், முன்னதாக ஒக்டோபர் 26 அன்று பதில் நிதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜெயந்தவால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

முக்கிய ஒதுக்கீடுகள் இங்கே:

நிதி அமைச்சு: ரூ. 634 பில்லியன்

மாகாண மற்றும் உள்ளூராட்சி சபைகள்;  ரூ. 618 பில்லியன்

பொது நிர்வாக அமைச்சு: ரூ. 596 பில்லியன்

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு: ரூ. 554 பில்லியன்

பாதுகாப்பு அமைச்சு: ரூ. 455 பில்லியன்
 

Leave a Reply