ஜூலை இன்னும் கறுப்பாகவே இருக்கிறது - இன்றுடன் 42 வருடங்கள்
இலங்கை
இலங்கையில் 1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளுக்குக் காரணமான தினமாக ஜூலை 23 அமைந்துள்ளது.
கறுப்பு ஜூலையாக இன்றைய தினம் உலகவாழ் தமிழ் மக்களினால் இந்த மிகப்பெரிய அவலம் நினைவுகூறப்படுகின்றது.
இலங்கையில் நடைபெற்ற கலவரங்களில் கடந்த 1983ஆம் ஆண்டின் கலவரமே, தமிழ் மக்களின் இதயத்தில் ஆறாவடுவை ஏற்படுத்திய கலவரமாக கருதப்படுகின்றது.
இலங்கையில் 1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளுக்குக் காரணமான தினமாக ஜூலை 23 அமைந்துள்ளது.
இந்த கலவரத்தின் பாதிப்பு இலங்கை வரலாற்றில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது.
1983ஆம் ஆண்டு ஜூலை 23 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த கொடூர சம்பவத்தின் பின்னர் தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்டிருந்த இயக்கங்கள் வேகமாக வளரத்தொடங்கியிருந்தன.
குறிப்பாக இந்த கலவரத்தின் பின்னரே இந்தியா இலங்கையின் இனப்பிரச்சினையில் தலையிட்டிருந்தது.
இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்வதற்கு இந்த ஜூலை 23 கலவரம் மிகப்பிரதானமாக அமைந்திருந்தது.
கலவரத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
நாடளாவிய ரீதியில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் எரிக்கப்பட்டன.
ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்டனர்.
இந்த கலவரத்தின் பின்னர் இலங்கையின் பல பகுதிகளில் இருபத்தைந்திற்கும் அதிகமான அகதி முகாம்கள் அமைக்கப்பட்டன.
கொழும்பு மாநகரசபையின் தீயணைப்புப் குறிப்பேட்டின்படி, அன்றையதினம் அதாவது ஜூலை 24ற்கு பின்னர் சுமார் 1,003 இடங்களில் தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயணைப்பு சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
இராணுவப் படையணி ஒன்றின் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் மேற்கொண்டு பதின்மூன்று இராணுவச் சிப்பாய்கள் கொல்லப்பட்டதன் எதிரொலியாகவே கொழும்பில் மிகவும் கொடூரமாக தமிழ் மக்கள் மீது தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டிருந்தன .
இராணுவ அதிகாரிகளின் திட்டமிட்ட சதிச் செயலால் சிங்கள மக்கள் மத்தியில் வதந்திகள் பரப்பட்ட நிலையில் சில குழுவினர் கொதித்தெழுந்தனர்.
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் திகதி இரவு பொறளைச் சந்தியில் உள்ள தமிழருக்குச் சொந்தமான உணவு விடுதி ஒன்று தாக்கி நொறுக்கப்பட்டதே இந்த கலவரத்தின் முதலாவது சம்பவமாக பதிவாகியுள்ளது.
இந்த இன வன்முறையின் ஆரம்பமே கறுப்பு ஜூலை என்று பதிவாகியுள்ளது.
வன்முறை 1983 ஜூலை மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 30 ஆம் திகதி வரை நீடித்தது.
இதன்போது வெலிக்கடை கொலைச் சம்பவமும் இடம்பெற்று கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்களை அவர்களது உறவினர்கள் யாரும் பார்பதற்கு அப்போதைய அரசாங்கம் அனுமதிக்கவில்லை என்பது வேதனையின் உச்சம்.
இவை நடந்து இன்றுடன் 42 வருடங்கள் கழிந்துவிட்டன.
குற்றவாளிகள் சட்டத்தின் முன் கொண்டுவரப்படவில்லை, தண்டிக்கப்படவுமில்லை.
ஜூலை இன்னும் கறுப்பாகவே இருக்கிறது, தமிழர்களுக்கு……
இதன் பின்னரே இலங்கை இடம்பெற்ற இனப்பிரச்சினையையும் சர்வதேச பிரச்சினையாக மாற்றியது.
கறுப்பு ஜூலை 23 கலவரம் இடம்பெற்று இன்றுடன் 42 வருடங்கள் – இதற்கான நீதி எங்கே.?






















