திருகோணமலை–மட்டக்களப்பு பிரதான வீதி சீரமைப்பு வேகமாக முன்னேறுகிறது
இலங்கை
திருகோணமலை–மட்டக்களப்பு பிரதான வீதி அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடுமையாக சேதமடைந்த நிலையில், தற்போது அந்த வீதியின் சீரமைப்பு பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இன்னிலையில் வெள்ளப் பாதிப்பின் காரணமாக மூடப்பட்டிருந்த தரை வழிப் பாதையை மீண்டும் பயணத்திற்குப் பொருத்தமான நிலையில் மாற்றுவதற்காக, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, பிரதேச சபை மற்றும் இராணுவத்தினரின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பினால் சீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும் சேதமடைந்த வீதியில் புதிய மண் நிரப்புதல், தாழ்வான இடங்களில் தரை உயர்த்துதல், மேலும் பாதையின் வலுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால், குறுகிய காலத்திற்குள் வாகனப் போக்குவரத்து மீண்டும் சீராகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





















