12 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு
இலங்கை
கொழும்பு, ராஜகிரிய பகுதியில் இராணுவ புலனாய்வுப் பிரிவு மற்றும் கலால் துறை அதிகாரிகள் முன்னெடுத்த கூட்டு நடவடிக்கையின் போது 02 கிலோ கிராம் குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
அதன் பெறுமதியானது சுமார் 12 மில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபர் தலவத்துகொடை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.






















