தையிட்டி விஹாரையின் விஹாராதிபதியை உடனடியாக வெளியேறுமாறு பிரதேச சபை கடிதம்
இலங்கை
சட்ட விரோதமரக அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம், தையிட்டி விஹாரையின் விஹாராதிபதியான ஜின்தோட்ட நந்தராம தேரரை, உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
தையிட்டியில் முறையற்ற விதத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தனனினால் இவ்வாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தையிட்டிப்பகுதியை சேர்ந்த காணி உரிமையாளரினால் பிரதேச சபைக்கு வழங்கப்பட்டிருந்த முறைப்பாட்டிற்கு அமைய வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் இந்த கடித்ததை அனுப்பியுள்ளதுடன் காணி உரிமையாளரின் கோரிக்கையினையும் கடித்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை குறித்த பகுதி ஜின்தோட்ட நந்தராம தேரர் உரித்தாளர் என கூறிவருகின்ற நிலையில், அதற்குரிய ஆவணங்களை ஒப்படைக்குமாறும், இல்லையேல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியிலிருந்து உடனடியாக வெளியேறுமாறும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.
குறித்த கடிதத்தினை கருத்தில் கொள்ளாது செயற்படும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேரருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.






















