• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பல உலக நாடுகளுக்கான நிதியுதவியை நிறுத்திய டிரம்ப்

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த 20 ஆம் திகதி பதவியேற்றுக்கொண்ட நிலையில் பல உலக நாடுகளுக்கான நிதியுதிவியை நிறுத்தியுள்ளார்.

அவர் பதவியேற்றதும் எரிசக்தி பயன்பாடு, குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம் என பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.

மேலும், சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் எனவும் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதாகவும் அறிவித்தார்.

இந்த நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு பயிற்சி உள்ளிட்ட திட்டங்களுக்காக அமெரிக்கா அளித்து வந்த நிதி உதவியை நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இதை நடைமுறைப்படுத்த அந்தந்த நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த 2023-ம் ஆண்டு சுமார் 60 பில்லியன் (அந்நாட்டின் பட்ஜெட்டில் 1%) ஒதுக்கப்பட்டது.
 

Leave a Reply