• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பசுமலைக்கு காதலியை காண சென்ற திருமலை இளைஞன் கைது

இலங்கை

நுவரெலியா மாவட்டம், அக்கரபத்தனை, பசுமலை பகுதியிலுள்ள பாடசாலை மாணவியான, டிக்டொக் காதலியின் வீட்டுக்கு சென்ற திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இளைஞன் பொலிஸாரால் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலை மாணவி தந்தையை இழந்தவர் எனவும், அவரின் தாயார் வெளிநாட்டில் வேலை செய்வதாகவும், சித்தப்பாவின் பராமரிப்பிலேயே இருந்து வருகின்றார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாணவியின் வீட்டுக்கு வந்த குறித்த இளைஞனின் நடத்தை தொடர்பில் பிரதேச மக்களுக்கு சந்தேகம் ஏற்பட அது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார், இளைஞரிடம் விசாரித்துள்ளனர். அவரிடம் அடையாள அட்டை இருக்கவில்லை. தகவல் வழங்கலிலும் தடுமாற்றம் இருந்துள்ளது. அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட, அவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் இன்று நுவரெலியா நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply