• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குடியுரிமை பிறப்புரிமை.. சட்டத்தை மீறிய டிரம்ப் உத்தரவுக்கு இடக்கால தடை விதித்த நீதிமன்றம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் கடந்த திங்கள்கிழமை பதவியேற்றார். அவர் பதவியேற்றவுடன் பல்வேறு அதிரடி உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

குறிப்பாக அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை அதிபர் டொனால்டு டிரம்ப் ரத்து செய்தார்.

இந்த உத்தரவு பிப்ரவரி 19 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக வாஷிங்டன், அரிசோனா, இலினாயிஸ் மற்றும் ஓரிகான் உள்ளிட்ட 22 ஜனநாயக கட்சி தலைமை வகிக்கும் மாகாண நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்நிலையில் டிரம்பின் உத்தரவுக்கு வாஷிங்டன் நீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்துள்ளது.

மேலும் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான அதிபரின் உத்தரவை அமல்படுத்த வேண்டாம் என்றும் அமெரிக்க அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த அதிபர் டிரம்ப் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
 

Leave a Reply