• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காதலே காதலே படத்தின் அட விளையாட்டா வீடியோ பாடல் வெளியானது

சினிமா

மங்காத்தா திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றவர் நடிகர் மஹத் ராகவேந்திரா . அதைத் தொடர்ந்து ஜில்லா படத்தில் நடித்தார். 2022 ஆம் ஆண்டு வெளியான டபுள் XL இந்தி திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார். தற்பொழுது மஹத் அடுத்ததாக `காதலே காதலே' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை அறிமுக இயக்குனரான ஆர்.பிரேம்நாத் இயக்கியுள்ளார். இப்படத்தில் மீனாட்சி கதாநாயகியாக நடித்துள்ளார்.

மஹத்துடன் இணைந்து பாரதிராஜா, விடிவி கணேஷ், ரவீனா, புகழ், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். `காதலே காதலே' படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க ஸ்ரீ வாரி பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாடலான `அட விளையாட்டா' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை வியன் புகழேந்தி வரிகளில் சந்தோஷ் ஹரிஹரன் பாடியுள்ளார்.

Leave a Reply